தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை..!
தமிழ்நாட்டில் வெஸ்ட் நெயில் வைரஸ் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இல்லை எனவும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோவை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அதி தீவிர சிகிச்சை பிரிவை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
வைரஸ் பாதிப்பு கேரளாவில் ஒருவருக்கு மட்டுமே ஏற்பட்டிருப்பதாகவும் தமிழகத்திற்கு நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். முகத்தில் கொப்பளத்துடன் பிரிட்டனில் இருந்து சென்னை வந்த பெண்ணின் ரத்த மாதிரியை ஆய்வு செய்ததில் நெகட்டிவ் என வந்ததாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




