100 அடியில் கொடிக்கம்பம்..!
திருச்சி அருகே வரும் ஜூலை மாதம் 100 அடி உயர கம்பத்தில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைக்க உள்ளார். 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் எழுபத்தைந்து இடங்களில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி கடற்கரை பகுதியில் உள்ள காந்தி சிலை எதிரே கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பணிகளை ஆய்வு செய்த புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஜூலை முதல் வாரத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து தியாகச் சுவரை பிரதமர் மோடி திறந்து வைப்பார் என கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





