--- --:--:-- --

ரோஸ்மில்க் குடித்த சிறுவன் உயிரிழப்பு..!

3

சென்னை கண்ணகி நகரில் ரோஸ்மில்க் குடித்து விட்டு வீடு திரும்பிய சிறுவன் திடீரென உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

 

இவரது இரண்டாவது மகன் வசந்தகுமார் வீட்டின் அருகில் உள்ள பார்க்கில் விளையாடிவிட்டு ரோஸ்மில்க் குடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது சாலையில் தள்ளாடிய நிலையில் மயங்கி விழுந்த சிறுவனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

 

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon