தண்டவாளத்தில் நெற்றியில் கருப்புமை பூசப்பட்ட நிலையில் ஆண் குழந்தை சடலம்..!
ஜோலார்பேட்டை ரயில்வே தண்டவாளத்தில் 2 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட நிலையில் நரபலி கொடுக்கப்பட்டதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து பணி மேற்கொண்ட போலிஸார் தண்டவாளத்திற்கு இடையே நெற்றியில் கருப்பு மை பூசி இருந்த ஆண் குழந்தையின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





