--- --:--:-- --

தெருநாய் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் குடம்..!

3

தஞ்சாவூர் மாவட்டம் இரும்பு தலை அருகே நாயின் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் குடத்தை கால்நடை மருத்துவ குழுவினர் பாதுகாப்பாக அகற்றினார். தஞ்சாவூர் மாவட்டம் இரும்புத்தலை பகுதி சாலையில் தெருநாய் ஒன்று பிளாஸ்டிக் குடத்தை தலையில் மாட்டியபடி பல நாட்களாக சுற்றித்திரிந்து வந்தது.

 

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி அளித்த தகவலின்பேரில் வந்த அரசு கால்நடை மருத்துவர் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் ஆகியோர் தலையில் பிளாஸ்டிக் குடத்துடன் சுற்றித்திரிந்த நாயை லாவகமாகப் பிடித்து அதன் தலையில் மாட்டியிருந்த பிளாஸ்டிக் குளத்தை கட்டர் உதவியுடன் காயம் எதுவும் இல்லாமல் வெட்டி அகற்றினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon