பெண் செய்தியாளர் இனி முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என உத்தரவு..!

ப்கானிஸ்தானில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என்று தாலிபன்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பெண்களுக்கு எதிராக பிற்போக்குத்தனமான உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர்.

 

பொது இடங்களில் பெண்கள் தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைத்து பர்தா அணிய வேண்டும். பெண்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்க கூடாது. பெண்கள் மேல்நிலை கல்வி பயில தடை என பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

 

செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் போது தங்கள் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு உள்ளதால் இதனை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.