16 வயது காதலியை கொலை செய்த 17 வயது காதலன்..!

நாமக்கல்லில் வேறு பெண்ணுடன் பேசிய காதலனை தட்டிக் கேட்டதற்காக காதலியை கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 17 வயதான நபர் அவனது காதலி 16 வயதான மாணவி.

 

இருவரும் வேலை தேடி வந்த நிலையில் நண்பனின் வீட்டில் தங்கியுள்ளனர். காதலன் தனது செல்போனில் வேறொரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் காதலி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

 

இதில் ஆத்திரம் அடைந்த அவர் காதலியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.