வடகொரியாவில் 3,50,000 பேர் மர்மக் காய்ச்சலால் பாதிப்பு..!
வடகொரியாவில் 3,50,000 பெயர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா பாதிப்பு வடகொரியாவுக்கு வரும் பறவைகளால் என அந்நாட்டு அரசு தொடர்ந்து கூறி வந்த நிலையில் நேற்று வடகொரியாவில் ஒருவர் பாதிக்கப்பட்டு இறந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஏப்ரல் இறுதி வரையில் மர்ம காய்ச்சல் நாடு முழுவதும் பரவியுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாட்டில் ஒரு லட்சத்து 87 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு மருத்துவம் வழங்கப்பட்டு வருகிறது என வட கொரியா தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





