ஒரு வாரத்தில் புதிய பிரதமர்: இலங்கை அதிபர்
இலங்கையில் கொந்தளிப்பான சூழல் நிலவி வரும் நிலையில் புதிய பிரதமர் ஒரு வாரத்திற்குள் நியமிக்கப்படுவார் என்று கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை முழுவதும் போராட்டம் பரவியுள்ள நிலையில் அதிபர் கோத்தபாய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
காலிமுகத்திடலில் கடந்த 9ஆம் தேதி வன்முறை மற்றும் அதன் முன்பு நடைபெற்ற வன்முறைச் செயல்களை நியாயப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டார். வன்முறைச் சம்பவங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் தற்பொழுது மாற்றுமுறை செயல்பாடுகளையும் முன்கொண்டு செல்வதற்கு ஒரு வாரத்திற்குள் புதிய அரசாங்கத்தை நிறுவ உள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கும் கட்சியின் சார்பில் மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தக் கூடிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்க உள்ளதாக கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




