ஹைதராபாத் சென்ற நடிகர் விஜய்..!
இயக்குனர் வம்சி படிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய் தளபதி 66 இல் நடித்து வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்று உள்ளார். இதை உறுதிப்படுத்தும் வகையில் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் கில்லி, போக்கிரி, வில்லு மற்றும் சிவகாசி படத்தில் விஜயுடன் நடித்த நடிகர் பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





