ஆட்டோ ஓட்டுனருடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்..!
வேலூர் அருகே 5 மாத குழந்தையை தவிக்க விட்டு விட்டு ஆட்டோ டிரைவருடன் ஓட்டம் பிடித்த பெண்ணுக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு 5 மாத பெண் குழந்தை பிறந்தது.
இதனிடையே அந்த பெண்ணுக்கு ஆட்டோ ஓட்டுநர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியதால் தனது குழந்தையை விட்டுவிட்டு தன் காதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளார். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்பொழுது காதலுடன் அந்த பெண் சென்றது உறுதியான நிலையில் அவர்களை அழைத்து வந்த போலீசார் குழந்தையை காட்டி பெண்ணின் மனதை மாற்றினார். கடைசியில் குழந்தைக்காக அந்த பெண் தனது காதலனை விட்டுவிட்டு தன் கணவரோடு சென்றுவிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





