--- --:--:-- --

பிறந்த நாள் விழாவுக்குச் சென்ற 14 வயதுச் சிறுமி பாலியல் பலாத்காரத்தால் கொலை..!

8

மேற்கு வங்கத்தில் ஹன்ஸ்‌காலியில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பாஜக மகளிர் அணியை சேர்ந்த உண்மை கண்டறியும் குழுவினர் சந்தித்து பேசியுள்ளனர்.

 

ஏப்ரல் 4ஆம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் மகளின் பிறந்தநாள் விழாவிற்கு சென்ற சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். நள்ளிரவில் வீடு திரும்பிய சிறுமி அதிக ரத்தப் போக்கு காரணமாக மறுநாள் உயிரிழந்தார். கூராய்வு செய்யாமல் சிறுமியின் உடல் எரிக்கப்பட்டதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

 

ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் ஒருவரின் மகன் தான் இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி என்று ஒரு சிறுமியின் பெற்றோர் தெரிவித்ததால் அவரும் அவரது நண்பர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வகையில் வானதி, ஸ்ரீனிவாசன், குஷ்பு உள்ளிட்ட பாஜக மகளிர் அணியைச் சேர்ந்த உண்மையை கண்டறியும் குழுவினர் அவர்களை சந்தித்து பேசியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon