--- --:--:-- --

ஜூன் 13ல் மீண்டும் பள்ளிகள் திறப்பு..!

6

கொரோனா காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் அடுத்த கல்வி ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன.

 

இதனால் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் இறுதிவரை பொதுத் தேர்வு நடைபெறுகிறது. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மே 11ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன. தேர்வுகள் முடிந்ததும் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட உள்ளனர்.

 

இதன் காரணமாக ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 24ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்றும் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன் காரணமாக மாணவர்களுக்கு கிடைக்கும் கோடை விடுமுறை நாட்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon