டி.டி.எப். வாசன் கைது செய்யப்பட்டுள்ளாரா..?
கோவையை சேர்ந்தவர் டிடிஎஃப் வாசன். பைக்குகள் குறித்தும் டிராவலிங் குறித்தும் யூடியூபில் வீடியோ வெளியிட்டு வருகிறார். கோவையை சேர்ந்த டிடிஎஃப் சென்னைக்கு வந்த பொழுது அவரை காண இளைஞர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டத்தை சேர்ந்த டிடிஎஃப் பைக்கில் கோவையில் இருந்து பைக்கில் நேபாளத்துக்கு சென்ற பொழுது சென்னை அம்பத்தூர் வந்தார். டிடிஎஃப் ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு செல்பி எடுக்க முயன்றனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
டிடிஎஃப், அவரது நண்பரையும் ஜீப்பில் அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் இருவரையும் கைது செய்து அழைத்து செல்வதாக இளைஞர்கள் நினைத்துக்கொண்டு ஜீப்பை விரட்டி சென்றனர். பின்னர் தான் இளைஞர்களிடத்தில் இருந்து அவரை மீட்டு சென்றுள்ளனர் என்று தெரியவந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





