ஏர்-கன் துப்பாக்கியால் சுட்டதில் 4வயது சிறுமி உயிரிழப்பு..!
தெலுங்கானா மாநிலம் சங்கரெடி மாவட்டம் அடுத்த கிராமத்தில் குரங்குகளை விரட்ட வைத்திருந்த துப்பாக்கியை 17 வயது சிறுவன் இயக்கிய போது அதில் இருந்து வெளியேறிய குண்டு தாக்கியதில் 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பிரசாத் என்பவர் தோட்டத்திற்கு வரும் குரங்குகளை விரட்ட ஆன்லைன் மூலம் ஏர்கன் துப்பாக்கி வாங்கியதாகவும் அதை காவலாளி வீட்டில் நாகராஜ் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
நாகராஜனின் பதினேழு வயது மகன் வீட்டிற்கு வந்த உறவினர்களுடன் சேர்ந்து துப்பாக்கி இயக்க பார்த்த போது எதிரே வந்த 4 வயது சிறுமியின் தலையில் குண்டு பட்டு இறந்ததாக கூறப்படுகிறது. சிறுமி குறித்து மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த புகாரில் துப்பாக்கி உரிமையாளர் பிரசாத் மற்றும் 17 வயது சிறுவனை பிடித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




