--- --:--:-- --

இன்று தாக்கலாகிறது தமிழக நிதிநிலை அறிக்கை..!

1

தமிழக சட்டப்பேரவையில் 2022 – 2023 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் புதுமையான நிதிநிலை அறிக்கை என்பதால் மக்களிடையே எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

 

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை காலை 10 மணிக்கு அமைச்சர் டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார். காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி நிதி நிலை அறிக்கையை பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

 

தற்போது இரண்டாவது முறையாக நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருக்கிறார். கொரொனா காரணமாக வருவாய் பற்றாக்குறைக்கு அதிக வாய்ப்புள்ள நிலையில் அதனை குறைப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அரசின் வருவாயைப் பெருக்கும் வகையில் நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் இடம்பெறக் கூடும் எனத் தெரிகிறது. மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிடுவது, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட திமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் குறித்த அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon