--- --:--:-- --

7 வயது மகனை திருமணம் செய்த தாய்..!

4

குறைந்த காலமே வாழ உள்ள தன்னுடைய ஏழு வயது மகனின் ஆசையை அவரது தாய் நிறைவேற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரியாவை சேர்ந்தவர் லோகன். 7 வயது சிறுவனான இவருக்கு கடந்த டிசம்பர் மாதம் சரி செய்ய முடியாத மரபணு நோய் ஏற்பட்டுள்ளது.

 

இதனால் இந்த சிறுவன் இன்னும் மூன்று ஆண்டுகளும் அல்லது பதினைந்து ஆண்டுகள் தான் வாழ்வான் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் இந்த சிறுவனின் அம்மாவாக தனது மகன் எப்போதும் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறுவானாம்.

 

அதனால் அந்த ஆசையை நிறைவேற்றும் வகையில் மகனுடன் திருமணத்தை தயார் செய்துள்ளார். அதன்படி அந்த சிறுவனுக்கும் அவரது அம்மாவுக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அப்பொழுது சிறுவனுக்கு மாப்பிள்ளை அலங்காரம் செய்யப்பட்டுள்ளன .அம்மாவும் ஒரு மணப்பெண் போல உடை அணிந்து வந்துள்ளார்.

 

அதுமட்டுமின்றி சிறுவனின் அம்மா கையில் மைக்கை பிடித்துக் கொண்டு இந்த வினோத விழாவிற்கு வருகை தந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி எனவும், தன்னுடைய மகன் தன்னை எப்போதும் திருமணம் செய்து கொள்வேன் என்று எப்போதும் கூறுவார் அதற்காக திருமண ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon