--- --:--:-- --

சரணடைந்த ரஷ்ய வீரரை உபசரித்த உக்ரைன் மக்கள்..!

5

ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைந்த ரஷ்ய வீரரை உக்ரைன் மக்கள் அன்பாக உபசரித்த செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது.

 

தொடக்கத்தில் இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து பேசிய ரஷ்ய அதிபர் தங்கள் நோக்கம் மக்களை கொல்ல வேண்டும் என்பது அல்ல உக்ரைன் ராணுவ தளவாடங்களை நிர்மூலமாக்க வேண்டும் என்பது மட்டுமே என தெரிவித்தார்.

 

ஆனால் போரில் தன் நாட்டுக்காக போராடும் ஆயிரக்கணக்கான வீரர்கள் மட்டுமல்ல ஒன்றுமறியாத அப்பாவி பொதுமக்களும் தான். இந்நிலையில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வந்த ரஷ்ய ராணுவ வீரர் ஒருவர் தனது ஆயுதங்களை எறிந்துவிட்டு உக்ரைன் மக்களிடம் சரணடைந்துள்ளார்.

 

அப்படி சரணடைந்த ரஷ்ய வீரருக்கு உக்ரேனிய மக்கள் குடிக்கக் டீ கொடுத்து உண்ண உணவு கொடுத்து அவரை அன்பாக ஆறுதல் படுத்தினார். மேலும் அவருடைய தாயாரை வீடியோ கால் மூலமாக அழைத்து பேச வைத்துள்ளனர். எல்லாம் சரியாகிவிடும் என தன் தாய் ஆறுதல் கூறியதும் அந்த ராணுவ வீரர் மனம் உருகி கண்ணீர் விட்டு அழுதார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon