--- --:--:-- --

தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு..!

4

மிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

கேரள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் புதுச்சேரி காரைக்கால் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் காலைவேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon