கொரொனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000 வழங்க உத்தரவு..!
கொரொனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தலா 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி, ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு எவ்வளவு இழப்பீடு வழங்க உள்ளது என அரசு தலைமை வழக்கறிஞர்கள், நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தலா 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பல மாநிலங்கள் ஏற்றுக்கொண்டதாக தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் 30 ஆயிரத்து 220 பேர் மரணம் அடைந்து இருப்பதாகவும் அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50,000 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.






