ஒரே ஒரு காரின் மீது மட்டும் மழை – அதிசய நிகழ்வு
இந்தோனிசியாவில் பெய்த மழையின் போது ஒரே ஒரு காரின் மீது மட்டும் மழை கொட்டும் வினோதமான நிகழ்வு அரங்கேறியுள்ளது. பொதுவாகவே மழை பெய்யும் நேரங்களில் மேகமூட்டம் எங்கு இருக்கிறதோ அந்த குறிப்பிட்ட இடத்தில் மட்டும் மழை பொழியும்.
மேகமூட்டம் இல்லாத பகுதி அருகிலேயே இருந்தாலும் அங்கு மழை பொழிவு இல்லாத காட்சியை சில சமயங்களில் பார்த்திருப்போம். ஆனால் ஒரே இடத்தில் ஓரிரு இரண்டடிகள் வித்தியாசத்தில் சிறிய பகுதியில் மட்டும் இதுபோன்ற நிகழ்வை நாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இது போன்றதொரு சம்பவம் இந்தோனேசியாவில் நடந்துள்ளது.






