நிஜ வாலுடன் பிறந்த குழந்தை..!
பிரேசில் நாட்டில் வாலுடன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதையடுத்து அறுவை சிகிச்சைக்கு பின்னர் குழந்தையின் வால் வெட்டப்பட்டு அகற்றப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பரிணாம வளர்ச்சிக் கொள்கையின் படி குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்றும் அவ்வாறு பிறந்த மனிதனின் மூதாதையருக்கு வால் இருந்ததாகவும் அறிவியல் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன.
பின்னர் நாகரிக வளர்ச்சி காரணமாக 20 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் நடக்கத் தொடங்கிய மனிதன் தன் உடலுடன் வளர்ந்த வாலை இழந்ததாக கூறப்படுகிறது. பொதுவாகவே வீட்டில் சில குழந்தைகள் அதிகளவில் சேட்டைகள் செய்வதுண்டு.
அவ்வாறு குறும்புத்தனம் செய்யும் குழந்தைகளை அறுந்த வாலு என்று பெரியவர்கள் கூறுவார்கள். அதற்கேற்றார் போல் அவ்வப்போது சில குழந்தைகள் அபூர்வமாக வாலுடன் பிறக்கவும் செய்கிறது.
வாலுடன் குழந்தை பிறந்ததால் அந்த குழந்தையின் தாய் மற்றும் தந்தை பிறந்த குழந்தையை மகிழ்ச்சியாக கூட முழுமையாக அனுபவிக்க முடியாமல் அறுவை சிகிச்சை செய்து மனதை தேற்றிக் கொண்டு வருகின்றனர்.






