மட்டையால் கணவரை தாக்கிக் கொலை செய்த மனைவி..!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே குடிபோதையில் தன்னை தாக்கிய கணவரை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த தனியார் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
காந்தி நகரை சேர்ந்தவர் ராஜாராம் மனைவி ரேவதி தனியார் பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றி வந்த நிலையில் லாரி ஓட்டுநரான கணவர் ராஜாராம் தினசரி 200 ரூபாய் பெற்றுக் கொள்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. அவர் கொடுத்த பணத்தை செலவு செய்துவிட்டு மீண்டும் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.
ரேவதி பணம் தர மறுத்ததால் வீட்டிலிருந்த கிரிக்கெட் மட்டையை எடுத்து அவரை தாக்கியதாகவும் அப்பொழுது ரேவதி கிரிக்கெட் மட்டையால் கணவரை சரமாரியாக தாக்கி கொலை செய்தார் எனவும் கூறப்படுகிறது.
பிறகு கிரிக்கெட் மட்டையை எடுத்து விட்டு கணவர் பைக்கில் இருந்து கீழே விழுந்து விட்டார் எனவும் அக்கம்பக்கத்தினரை நம்ப வைக்க முயன்றார். போலீசார் விசாரணையில் உண்மையை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.






