--- --:--:-- --

பிள்ளைகள் குற்றம் செய்தால் பெற்றோருக்கு தண்டனை வழங்கப்படும்..!

3

பிள்ளைகளின் நடத்தை மோசமாக இருந்தாலும் குற்ற செயல்களில் ஈடுபட்டாலும் பெற்றோருக்கு தண்டனை வழங்குவதற்கான சட்டம் சீனாவில் போடப்பட்டுள்ளது.

 

குடும்ப கல்வி சட்டம் எனக் கூறப்படும் சட்ட வரைவில் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கண்காணிப்பில் இருக்கும் குழந்தைகள் தப்பு செய்தாலும் குற்றங்களில் ஈடுபட்டாலும் சம்பந்தப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்ப கல்வி வழிகாட்டும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

 

சிறுவர்கள் தவறாக நடந்து கொள்வதற்கு குடும்ப கல்வி போதியளவு இல்லாததே முக்கிய காரணம் என்பதால் இந்த சட்டம் தேவையான ஒன்று என இந்த சட்ட ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஜான் டேவிட் கூறியுள்ளார்.

 

சீனாவில் சிறுவர்களின் விளையாட்டுகளுக்கு அடிமையாவதை கட்டுப்படுத்துவதற்காக சிறுவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதற்கான நேரத்திற்கு சீன அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon