--- --:--:-- --

தேசிய அளவில் டிரெண்டிங் ஆன ரிஜக்ட் ஜோமெட்டோ..!

11

நாட்டின் பன்முகத் தன்மைக்கு எதிராக ஊழியர் நடந்துகொண்டதாக வருத்தம் தெரிவிப்பதாகவும் ஜோமெட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த விகாஷ் என்ற நபர் ஜோமெட்டோவில் ஆர்டர் செய்துள்ளார்.

 

அவருக்கு வழங்கப்பட்ட உணவு முழுமையாக இல்லாததால்தனது குறையை மட்டும் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார். அவரிடம் பேசிய அந்த நிறுவன ஊழியர் ஹிந்தியில் பேசியதாகவும் தனக்கு ஹிந்தி தெரியவில்லை என்பதற்காக தன்னால் நிவாரணம் பெற முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

 

மேலும் ஒரு இந்தியராக இருந்துகொண்டு இந்தியாவின் தேசிய மொழியான ஹிந்தியை கொஞ்சம் தெரிந்து வைத்திருக்க வேண்டாமா என கேட்டதாகக் கூறி அது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்டையும் டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார்.

 

இதையடுத்து ரிஜக்ட் ஜோமெட்டோ என்ற ஹேஸ்டெக் ட்ரெண்டானது. இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு எதிராக நடந்து கொண்டவரை பணிநீக்கம் செய்துள்ளதாகவும் இதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon