பாம்பு ஒன்றை பாம்பை விழுங்கிய அரிய காட்சி..!
கடலூர் ராம்நகரில் வீட்டுத் திண்ணையில் கொடிய விஷம் வாய்ந்த கட்டுவிரியன் பாம்பு ஒன்றை பாம்பை விழுங்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. அரை மணி நேரத்தில் ஒருபாம்பை கட்டுவிரியன் விழுங்கிவிட்டது.
தகவல் அறிந்து அங்கு வந்த பாம்பு அலுவலர்கள் கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பை பிடித்து சென்று வேறு பகுதியில் விட்டுவிட்டார். ஒரு பாம்பை மற்றொரு பாம்பு விழுங்குவது வழக்கமான நிகழ்வு என பாம்பு ஆர்வலர் கூறியுள்ளார்.






