புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 15ஆம் தேதி வரை நீட்டிப்பு..!
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் புதுச்சேரியில் அக்டோபர் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
இரவு 11 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் கூறியுள்ளது. கோவில்களில் நடக்கும் திருமணங்களில் ஒரே நேரத்தில் 25 பேர் வரை கலந்து கொள்ளலாம்.
அதே போல் திருமண நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மிகாமல் இறுதி ஊர்வலங்களில் 20 பேருக்கு மிகாமலும் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. மேலும் சினிமா தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுடன் நள்ளிரவு 12.30 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.






