இடிந்து விழுந்த ரிசார்ட்..! 10 பேர் படுகாயம்..!
அமெரிக்காவில் கடற்கரையோரம் கட்டப்பட்டிருந்த ரிசார்ட்டில் பால்கனி இடிந்து விழுந்தது 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். கலிபோர்னியாவில் உள்ள மலிபு கடற்கரையில் ரிசார்ட் கட்டப்பட்டுள்ளன.
இதில் உள்ள ரிசார்ட் ஒன்றில் சிலர் இணைந்து பிறந்தநாள் விழாவை கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது 20க்கும் மேற்பட்டவர்கள் கூடி இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக திடீரென பால்கனிஇடிந்து விழுந்தது.
இதனால் பால்கனியில் இருந்தவர்கள் கடற்கரையில் உள்ள பாறைகளில் விழுந்தனர். இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.






