ரெம்டெசிவர் மருந்தை திருடி 36 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற மருந்தாளர் கைது..!
சென்னை புரசைவாக்கத்தில் மருந்தகத்தில் இருந்து ரெம்டெசிவர் மருந்தை திருடி 36 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற மருந்தாளர் கைது செய்யப்பட்டார். புரசைவாக்கத்தில் உள்ள நாராயணா மருத்துவமனையில் மருந்தகம் மேலாளர் நேற்று ரெம்டெசிவர் மருந்து இருப்பு குறித்த சரிபார்த்தபோது 6 ரெம்டெசிவர் மருந்து காணாமல் போயிருந்தது.
மருந்தகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதை மருந்தகத்தில் கடந்த 7 மாதங்களாக மருந்தாக பணிபுரியும் ஜெயசூர்யா என்பவர் இவரை தேடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மருந்தக மேலாளர் அளித்த புகாரில் ஜெயசூர்யா கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் சிவராத்திரி தாம்பரத்தில் உள்ள ஸ்டாலின் தாமஸ் என்பவருக்கு ஒரு குப்பி 6 ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில் 36 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது தெரியவந்தது.






