முழு ஊரடங்கை அமல்படுத்த உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்..!
மத்திய, மாநில அரசுகள் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
கொரொனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் முதியோர், நோய்வாய்பட்டு நலிந்த பிரிவினரை பாதுகாப்பது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதும் தொற்றுநோயின் சங்கிலியை அறுப்பதற்கு ஊரடங்கை பரிசீலிக்குமாறு நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.
பொது மக்கள் பெரும் திரளாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனிடையே 4 வாரம் முழு ஊரடங்கை அமல்படுத்தினால் இரண்டாவது அலையின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும் என்று அமெரிக்க மருத்துவர்கள் அடங்கிய நிபுணர் குழுவினர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறார்கள்.






