தமிழகத்தில் 6 ஆவது முறையாக ஆட்சியமைக்கும் திமுக..!
2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களின் தீர்ப்பு திமுக ஆட்சி அமைப்பதை உறுதிபடுத்தியுள்ளது. இதன்மூலம் ஆறாவது முறையாக தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை திமுக கைப்பற்றுகிறது.
கட்சி தொடங்கி 8 ஆண்டுகளுக்குப் பின்னர் 1957ஆம் ஆண்டு தேர்தல் களத்தில் நுழைந்து திராவிட முன்னேற்ற கழகம் அடுத்த 10 ஆண்டுகளில் 1967ஆம் ஆண்டு 137 இடங்களில் வென்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
தொடர்ந்து 1971 ஆம் ஆண்டு 184 தொகுதிகளில் வென்று 2-வது முறையாக ஆட்சி அமைத்தது. அதன்பின் 1977 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவிடம் ஆட்சி அதிகாரத்தைக் பறிகொடுத்தது திமுக.
தொடர்ந்து மூன்று சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியை தழுவிய அந்த கட்சி முதலமைச்சர் எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் 1,989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் 150 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது.
திமுக ஆட்சி கலைக்கப்பட்டு 1996ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இரு இடங்களை மட்டுமே பெற்றபோதும் 1996 ஆம் ஆண்டு 176 இடங்களை கைப்பற்றி வென்றது. 2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்த திமுக 2006 ஆம் ஆண்டு தனிப்பெரும்பான்மையின்றி ஆட்சி பொறுப்பை ஏற்றது.
இந்த தேர்தலில் திமுக கூட்டணி 163 இடங்களை பெற்ற போதும் திமுக 96 இடங்களை மட்டுமே பெற்றது. இதனால் கூட்டணி கட்சியான காங்கிரசின் ஆதரவுடன் ஐந்து ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்து அதன் பின்னர் கடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் ஆட்சி அதிகாரத்தை பெற இயலாமல் போன திமுக தற்போது தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வல்லமை பெற்றுள்ளது.






