--- --:--:-- --

கோவை தெற்கு தொகுதியில் கமலை வீழ்த்தி வானதி வெற்றி..!

3

கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெறுவதை காண்பதை போலவே அமைந்தது. வேட்பாளர்களும் மாறி மாறி முன்னிலை பெற்று எதிர்பார்ப்பை அதிகப்படுத்தினர். வானதியிடம் கமல்ஹாசன் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

 

பாரதிய ஜனதா சார்பில் அந்தக் கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

 

கோவை தெற்கு தொகுதியில் ஆரம்பித்ததிலிருந்தே அதிக கவனத்தை ஈர்த்து தொகுதிகளில் ஒன்றாகவே இருந்தது கோவை தெற்கு. காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட கமல்ஹாசனுக்கு வானதி பழக்கூடை அனுப்பிவைத்தது, தொடங்கி உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வருகைக்கு பின்னர் விவாதத்திற்கு கமல்ஹாசனை வானதி அழைப்பது அதற்கு கமல் துக்கடா அரசியல்வாதி என அதனை விமர்சித்தது என பேசுபொருளாக இருந்தது.

 

கோவை தெற்கு தொகுதியில் வானதிக்கும் கமலுக்கும் இடையே தான் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வாக்குகள் எண்ணப்பட்ட போது தொடக்கத்தில் ஜெயக்குமார் முன்னிலையில் இருந்தார்.

 

சற்று நேரத்தில் கமல்ஹாசன் முன்னிலை பெற மூன்றாவது இடத்தில் இருந்த வானதி இரண்டாவது இடத்திற்கு சென்றார். இருவரும் மாறி மாறி முன்னிலை பெற கடைசியில் ஆயிரத்து 728 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தினார் வானதி.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon