மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!
மேற்குவங்க தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் சகோதரி மம்தா பானர்ஜிக்கு தனது வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மேற்கு வங்க மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






