--- --:--:-- --

கடம்பூர் ராஜுவுடன் போட்டியிட்ட டிடிவி தினகரன் படுதோல்வி..!

7

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று 6-வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. கடம்பூர் ராஜுவுடன் போட்டியிட்ட டிடிவி தினகரன் படுதோல்வி அடைந்துள்ளார்.இதனையடுத்து மு க ஸ்டாலின் முதன் முறையாக தமிழக முதல் அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

 

தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் அதனைத் தொடர்ந்து மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதனை அடுத்து திமுக 158 இடங்களில் அமோக வெற்றி பெற்றது.

 

திமுக மற்றும் 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 18 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

 

மதிமுக 4 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலா 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள திமுக தமிழகத்தில் ஆறாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதன் முறையாக தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon