--- --:--:-- --

கேரள சட்டசபை தேர்தலில் பினராயி விஜயன் வெற்றி..!

5

140 தொகுதிகள் கொண்ட கேரள சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக அணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக மூன்றாவது அணியாக களமிறங்கினார். கடந்த 6ஆம் தேதி நடந்த தேர்தலின் முடிவுகள் நேற்று எண்ணப்பட்டன.

 

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தனியாக 62 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்றது. இதைப்போல பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் 21 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 15 இடங்களிலும் வெற்றி பெற்றது.

 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அந்த கட்சிக்கு ஏற்கனவே இருந்த ஒரு எம்எல்ஏ தொகுதி கைவிட்டு போயுள்ளது

 

. இந்த தேர்தலில் இடதுசாரி கூட்டணி கட்சிகள் 99 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதன் மூலம் கேரளாவில் இடதுசாரி கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon