விவசாயிகளின் தொடர் போராட்டம் 31வது நாளை எட்டியுள்ளது..!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் 31வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பல மாநிலங்களிலிருந்து விவசாயிகள் டெல்லிக்கு படையெடுத்து வந்தனர். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டங்களை தொடர விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

 

விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக தலைநகர் டெல்லி ஸ்தம்பித்துள்ளது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர் தோல்வியில் முடிந்துள்ளன. இந்த நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் இன்று 31வது நாளை எட்டியுள்ளது.


Leave a Reply