--- --:--:-- --

கோவை : பொள்ளாச்சியில் கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 4 பேர் அதிரடி கைது.சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான வாகனங்கள்,நகைகள்,பணம் பறிமுதல் !!!

3.1

கோவை மாவட்டம் பொள்ளாச்சி உட்கோட்டத்தில் நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை கண்டுபிடிக்கும் பொருட்டு கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா,கோவை சரக துணை தலைவர் நரேந்திரன் நாயர் உத்தரவின் பேரில் எஸ்.பி.அருளரசு மேற்பார்வையில் பொள்ளாச்சி டிஎஸ்பி சிவக்குமார் தலைமையில் பொள்ளாச்சி காவல் ஆய்வாளர் பிரபுதாஸ்,உதவி ஆய்வாளர்கள் கார்த்திகேயன், சரவணன், ராஜேந்திர பிரசாத், மனோகரன் உள்ளிட்ட பலர் அடங்கிய தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

 

இந்த நிலையில் பழைய குற்றவாளிகளான கோட்டூர் பகுதியை சேர்ந்த சூர்ய ஜெகதீஸ்,கோட்டூர் மலையாண்டி பட்டிணம் ரகுபதி, மல்லீஸ்வரன், ஆனைமலை சபரிநாதன் உள்ளிட்டோரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

 

விசாரணையில் பொள்ளாச்சி,கோவை சின்னியம்பாளையம், நெகமம், சூளேஸ்வரன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள்,நகைகள் மற்றும் பணம் உள்ளிட்ட சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களை கூட்டாக சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டனர்.இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான வாகனங்கள்,நகைகள் மற்றும் ரூ.5.10 லட்சம் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.மேலும்,கொள்ளையர்கள் கொள்ளைக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

 

பின்னர்,அவர்களை பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.கொள்ளையர்களை விரைவாக கைது செய்த தனிப்படையினரை கோவை எஸ்.பி.அருளரசு வெகுமதியினை வழங்கி தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

 

சமீப காலமாக கோவை மாவட்டத்தில் காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கையால் பழைய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்படுவதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon