பிறப்பு, இறப்பு பதிவிற்கு ஆதார் கட்டாயமில்லை..!
பிறப்பு, இறப்பு பதிவிற்கு ஆதார் கட்டாயமில்லை என இந்திய தலைமை பதிவாளர் தெளிவுபடுத்தியுள்ளார். இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள இந்திய தலைமை பதிவாளர் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி பதிலளித்துள்ளார்.
பிறப்பு, இறப்பு பதிவு செய்வோர் தாங்களாக முன்வந்து ஆதார் எண்ணை அளித்தாலும் அதை ஆவணங்களில் அச்சிடவோ, மின்னணு வடிவில் சேமித்து வைக்கக்கூடாது என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.






