தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து ரூ.3.27 கோடி அபராதம் வசூல்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புப்படம்


சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து இதுவரை ரூ.3.27 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை அறிவத்துள்ளது.

 

கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் அதை மீறி பொதுமக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந் நிலையில், 144 தடை உத்தரவை மீறிய 3 லட்சத்து 24 ஆயிரத்து 269 பேர் கைதாகி விடுவிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 3 லட்சத்து 6 ஆயிரத்து 339 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2 லட்சத்து 76 ஆயிரத்து 183 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

3 கோடியே 27 லட்சம் ரூபாய் அபராதமாக இது வரை வசூலிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் கடந்த 16ம் தேதி முதல் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

 


Leave a Reply