இந்தியா முழுவதும் ஹெலிகாப்டர் மூலம் பண மழை பொழியப்போகிறதா?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஹெலிகாப்டர் மூலம் நாட்டின் ஒவ்வொரு நகரத்திலும் பணத்தை வீசி மக்களுக்கு கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வதந்தி பரவியுள்ளது செய்தி முற்றிலும் தவறானது என தகவல் மற்றும் செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவால் வீட்டில் முடங்கியுள்ள ஏராளமான மக்கள் பொருளாதார பிரச்சனையில் சிக்கி தவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் மத்திய அரசு ஒவ்வொரு நகரத்திலும் ஹெலிகாப்டர் மூலமாக மக்கள் மீது பண மழை பொழிய போவதாக தகவல் பரவியது, இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என்றும் இதுபோல் வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏற்றுமதி 29 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளது .

 

கடந்த மார்ச் மாதத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி மதிப்பு 35 சதவீதம் குறைந்து 21.4 பில்லியன் டாலராக உள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு மாதத்தில் ஏற்றுமதி இவ்வளவு குறைந்துள்ளது கடந்த 21 ஆண்டுகளில் இதுவே முதன்முறையாகும். இதேபோல இறக்குமதியும் 28.7 சதவீதம் குறைந்து உற்பத்தி 31.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

 

இந்த தாக்குதலில் ஏற்றுமதி-இறக்குமதி கடும் சரிவை சந்திக்க காரணமென வர்த்தக அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதற்கிடையில் மார்ச் மாதத்தில் மொத்த விலை பணிவீக்க விகிதம் ஒரு சதவீதமாக குறைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.


Leave a Reply