--- --:--:-- --

முதலமைச்சர் இன்று முதல் விதித்த புதிய கட்டுப்பாடுகள்! 1 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும்!

hjjhv

கொரொனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி இன்று புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதன்படி இன்று முதல் அத்தியாவசிய கடைகள் மதியம் ஒரு மணி மட்டுமே திறந்திருக்கும். கொரொனா வைரஸ் பரவுவதை தவிர்க்க அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மதம்சார்ந்த கூட்டங்களை தவிர்த்து தனிநபர் சமூக விலகலை கடைபிடிக்கவேண்டும்.

 

கொரொனா வைரஸ் சாதி மத பேதமின்றி அனைவரையும் தாக்கக்கூடியது. இதற்கு மத சாயம் பூசுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும். அனைத்து தனியார் மருத்துவமனைகள் செயல்படுவதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும். சோதனைக்கு உட்படாதவர்களை உடனுக்குடன் அவர்களது வீட்டுக்கோ அல்லது தனிமைப்படுத்தும் மையங்களுக்கும் அனுப்ப வேண்டும்.

 

கொரொனாவால் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு மன அழுத்தத்தினால் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க சமுதாயத் தலைவர்கள் முன்னின்று ஒத்துழைக்க வேண்டும். இதற்காக அமைக்கப்பட்டுள்ள மனநல மருத்துவர்கள் ,அடங்கிய குழுக்கள் மூலம் ஸ்கைப் போன்ற செயல்களை பயன்படுத்தி தனிமையில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு ஆலோசனைகளை வழங்க அரசோடு இணைந்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

 

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் போன்றவற்றை வீடுகளுக்கே சென்று வழங்க அரசோடு இணைந்து சமூக ஆர்வலர்கள் செயல்படலாம். வயதானவர்கள், சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்களின் விவரங்களை அறிந்து அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை வழங்குவதற்கு அரசுடன் சேர்ந்து தன்னார்வலர்கள் பணியில் ஈடுபட வேண்டுகோள்.

 

சந்தை பகுதிகளில் தனிநபர் விலகளை கடைபிடிப்பது உறுதி செய்ய தன்னார்வலர்கள் அடையாள அட்டைகளை வழங்கி பயன்படுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் அத்தியாவசிய கடைகளில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த இன்று முதல் அத்தியாவசிய கடைகள் மதியம் ஒரு மணி மட்டுமே திறந்திருக்கும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon