--- --:--:-- --

கொரோனாவுக்கு மாத்திரை சப்ளை பண்ணுங்க..!! இந்தியாவிடம் அமெரிக்கா கெஞ்சல்!!

4

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்சி குளோரோ குயின் எனும் மாத்திரைகளை அதிக அளவில் சப்ளை செய்யுமாறு இந்தியாவிடம் அமெரிக்க அதிபர் கெஞ்சாத குறையாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா, அனைத்து துறைகளிலும் முன்னேறிய நாடாக தன்னை முன்னிறுத்தி உலகை நாடுகளிடையே தன்னை பெரிய அண்ணனாக காட்டி வந்தது. தான் உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்கியே தீர வேண்டும் என பிற நாடுகளை கட்டாயப்படுத்துவதும் அமெரிக்காவின் வாடிக்கையாக இருந்து வந்தது.

 

ஆனால், இந்த கொரோனா வைரஸ் கொடூரம் உலக வல்லரசான அமெரிக்காவையே நிலைகுலையச் செய்து விட்டது. கடந்த ஒரு வாரமாக கொரோனா வின் கோரத் தாண்டவத்தால் அமெரிக்காவில், வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் கட்டுக்கடங்காமல் சென்று வருகிறது. தினமும் 30 ஆயிரம் பேருக்கு மேலாக வைரஸ் பாதிப்பு பரவி இப்போது 3 லட்சத்து 11 ஆயிரத்தை கடந்து, பலி எண்ணிக்கையும் தினமும் ஆயிரத்திற்கும் மேல் எண்ணிக்கை உயர்ந்து 8500 ஐ கடந்துள்ளது.

 

கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா தனது அத்துனை சாம, தான, பேத, தண்டங்களை பயன்படுத்திப் பார்த்தும் முடியாத நிலையில் தத்தளிக்கிறது. கொரோனாவுக்கு உரிய மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், மலேரியாவுக்கு வழங்கப்படும் மருந்துகளை நோயாளி களுக்கு கொடுத்து சமாளித்து வருகிறது. அத்துடன் ஹைட்ரோ குளோரோ குயின் என்ற மாத்திரைகளையும் கொரோனா நோயாளிகளுக்கு வழங்குவதால் ஓரளவுக்கு தற்காலிக தீர்வு கிடைப்பதாக அமெரிக்கா கூறிவரும் நிலையில், இந்த மாத்திரைகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த மாத்திரைகளை அமெரிக்காவுக்கு சப்ளை செய்து வந்த இந்தியா, கடந்த ஒரு மாதமாக நிறுத்திவிட்டது.இந்நிலையில், நேற்று நமது பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொரோனாவை இரு நாடுகளும் ஒன்றிணைந்து எதிர்கொள்வது குறித்து விவாதித்தனர்.

 

இந்நிலையில், பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், மிகப் பெரிய நாடான இந்தியா ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகளை பெருமளவில் இருப்பு வைத்திருக்கும் என நம்புகிறேன். எனவே இந்த இக்கட்டான நேரத்தில் அமெரிக்காவுக்கு அமெரிக்காவுக்கு வழங்கி உதவுமாறு கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon