--- --:--:-- --

கொரொனாவை பரப்புவது போல ரூபாய் நோட்டில் மூக்கை வாயை உரசிய நபர்!

2

கொரொனாவை பரப்புவது போல் சித்தரித்து ரூபாய் நோட்டில் மூக்கைச் சிந்தியபடி டிக் டாக் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் பகுதியை சேர்ந்த 40 வயதான நபர் ஒருவரை இந்தியாவிற்கு வரவேற்பதாகவும், தீர்வு இல்லாத இந்த நோய் பரவல் புனிதமான தண்டனை என்றும் குறிப்பிட்டு டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டிருந்தார்.

 

அதில் கொரொனாவை பரப்புவது போல் சித்தரித்து ரூபாய் நோட்டில் மூக்கு, வாய் பகுதிகளை துடைப்பது போல் நடித்திருந்தார். இந்த வீடியோ வைரலானதையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் வீடியோவை பரப்பி அவர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர்.

வகுப்புவாத பிரிவினைகளை ஏற்படுத்த முயற்சிப்பவர்களை மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கடுமையாக எச்சரித்துள்ளார். இது தொடர்பாக பேஸ்புக்கில் நேரலையில் மக்களுடன் உரையாற்றிய அவர் சமூக வலைதளங்களில் கொரொனா பற்றிய தவறான செய்திகள் வெளிவருவதாக வேதனை தெரிவித்தார்.

 

இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பி வகுப்புவாத பிரிவினைகளை ஏற்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். மக்களிடம் தவறான செய்திகளை பரப்புவோரையும், இதுபோன்ற வீடியோக்களை பரப்புவோரையும் கடுமையாக எச்சரிப்பதாக தெரிவித்தார். கொரொனா வைரஸ் எந்த மதத்தையும் தாக்க வருவதில்லை என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon