டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 7 பேருக்கு கொரொனா ! திருவாரூரில் அனுமதி !

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


திருவாரூர் மாவட்டத்தில் ஏழு பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற மியான்மர் நாட்டை சேர்ந்த 13 பேர் உட்பட 56 பேர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

அவர்களில் மியான்மர் நாட்டை சேர்ந்த இரண்டு பேருக்கும், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மற்றும் நீடாமங்கலம் பகுதிகளை சேர்ந்த ஐந்து பேருக்கும் கொரொனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 7 பேரும் கொரொனா வார்டில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

 

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 2,364 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் குழுவினரின் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

 

கடந்த ஒன்பது நாட்களில் 144 தடை உத்தரவை மீறி வீடுகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த 18 பேர் வெளியில் நடமாடுவதாக வந்த புகாரை அடுத்து 18 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Leave a Reply