கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றாங்கரை ஊராட்சி மன்ற தலைவர்
மண்டபம் ஒன்றியம் ஆற்றாங்கரை ஊராட்சி பேருந்து நிலையம், முஹம்மதியா நகர், அல் உமர் விளையாட்டு திடல், மறவர் தெரு உள்பட 12 க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருந்தும் பணியினை மேற்கொண்டு வரும் ஊராட்சி மன்ற தலைவர் இதனால் இப்பகுதியில் நடக்கும் சம்பவங்களை கண்டறிய முடியும் என்ற நம்பிக்கை உள்ளதா கூறுகிறார். மேலும் இவருக்கு உறுதுணையாக
தொழிலதிபர் டத்தோ ஜலாலுதீன் இணைந்து நடைபெற்று வருகிறது.

ஊராட்சி மன்ற தலைவர் முஹம்மது அலி ஜின்னா, துணை தலைவர் நூருல் அஃபான் ஆலோசனை அடிப்படையில் இடத்திற்கான ஆய்வு செய்யப்பட்டது. முஸ்லீம் ஜமாத் பொருளாளர் ரியாஸ், உப தலைவர் முனாப், சங்க உறுப்பினர் நாசர் அலி, கண்காணிப்பு கேமரா வல்லுநர் அபுதாஹீர், ஜாஹீர் ஆகியோர் உடன் சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




