பெரியார் குறித்த கருத்தில் உறுதியாக இருங்கள் ரஜினி..! உங்களுக்கு நான் வாதாடுகிறேன்…! உசுப்பேத்தும் சு.சாமி!!

பெரியார் பற்றி ரஜினி கூறியது உண்மைதான். எனவே ரஜினி தமது கருத்தில் உறுதியாக இருந்தால், ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடத் தயார் என சுப்பிரமணிய சாமி டுவீட் போட்டு உசுப்பேத்தியுள்ளார்.

 

நடிகர் ரஜினிகாந்த் குறித்து அடிக்கடி கமெண்ட் அடித்து வந்தவர் தான் பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியசாமி . ரஜினிக்கு அரசியல் பத்தி ஒண்ணுமே தெரியாது. அரசியலுக்கு லாயக் கற்றவர். அரசியலுக்கும் ரஜினி வரப்போவதில்லை என்றே கடந்த சில ஆண்டுகளாக சுப்பிரமணியசாமி கூறி வந்தார்.

 

இந்நிலையில் பெரியார் குறித்து ரஜினி பேசியது சர்ச்சையாகி, ரஜினியும் மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்க முடியாது என திட்டவட்டமாக கூறி விட்டார். மன்னிப்பு கேட்க மாட்டேன் என ரஜினி கூறியதற்கு ஒரு தரப்பில் ஆதரவும் மற்றொரு தரப்பில் எதிர்ப்புகளும் எழுந்து தேசிய அளவில் பெரும் சர்ச்சை எழுந்து பரபரப்பாகியுள்ளது.

இதில், இதுவரை ரஜினியை விமர்சித்து வந்த சுப்பிரமணிய சாமி, பெரியார் பேச்சு சர்ச்சை குறித்த விவகாரத்தில் ஒரு மாற்றத்திற்காக ரஜினிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள சு.சாமி,1971-ல் நடைபெற்ற பெரியார் பேரணியில் ராமர் மற்றும் சீதையை கேவலமாக சித்தரித்து அணிவகுத்துச் சென்றது உண்மை. இதனை துக்ளக் இதழில் சோ பதிவிட்டுள்ளார்.

 

எனவே நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்தில் உறுதியாக இருந்தால், தேவைப்பட்டால் ஒரு மாற்றத்திற்காக இம்முறை அவருக்கு நீதிமன்றத்தில் சட்ட ரீதியில் ஆதரவளிக்கத் தயாராக உள்ளேன் என சு.சாமி பதிவிட்டு ரஜினியை உசுப்பேற்றியுள்ளார்.


Leave a Reply