3 நாட்களில் ரூ.600 கோடி மதுவிற்பனை

பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி டாஸ்மாக் கடைகளில் 600 கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனையாகி உள்ளது. பொங்கல் பண்டிகை காலத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் 606 கோடியை 72 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10% மது விற்பனை உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்றுடன் பொங்கல் விடுமுறை முடிவடைய உள்ள நிலையில் மதுவிற்பனை மேலும் 380 கோடி வரை உயர வாய்ப்புள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இன்றுடன் சேர்த்து பொங்கல் விடுமுறையில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் 986 கோடி ரூபாய் அளவிற்கு மது விற்பனை கூடும் என தகவல் தெரிவிக்கின்றன.


Leave a Reply