ராமநாதபுரம் அருகே சைக்கிள் தின விழிப்புணர்வு பேரணி

பிரதமர் மோடியால் ஆகஸ்ட் 29, 2019 பிட் இந்தியா தொடங்கப்பட்டது. பிட் இந்தியா இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற ஒவ்வொரு குடிமகனும் கிடைக்கும் நேரத்தில் உடல் ரீதியாக சுறுசுறுப்பான உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். இளைஞர்கள் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் பிட் இந்தியா மிஷன் 2020 ஜனவரி 18 ஆம் தேதியை சைக்கிள் தினத்தை ஏற்பாடு செய்ய திட்டமிட்டது.

 

இதன்படி பிட் இந்தியா சைக்ளோத்தான் சைக்கிள் ஓட்டுதல் குழுக்கள், பள்ளிகள், கல்லூரிகள், அமைப்புகள், கவுன்சில்கள், பஞ்சாயத்துகள், நிறுவனங்கள், சங்கங்கள், ஆர்டபிள்யூஏ, என்ஜிஓ., சார்பில் சைக்கிள் தினத்தையொட்டி, ராமநாதபுரத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. தொருவளூர்- நயினார்கோவில் சந்திப்பு சாலையில் தொடங்கிய விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் துவக்கி வைத்தார்.

ஊராட்சிகள் உதவி இயக்குநர் வீ. கேசவதாசன், ராமநாதபுரம் வட்டாட்சியர் முருகவேல், மாவட்ட இளையோர் மைய ஒருங்கிணைப்பாளர் நோமன் அக்ரம், ராமநாதபுரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார்,
ஊராட்சி மன்றத் தலைவர்கள் தொருவளூர், எஸ்.பஜூருதீன், சூரங்கோட்டை தெய்வநாதன், காரேந்தல்
நாகரத்தினம் ஊராட்சி செயலாளர்கள் சூரன்கோட்டை பாக்யராஜ், பேராவூர்ஆனந்தி, தொருவளூர் முனியசாமி,
சக்கரக்கோட்டைவிமல்ராஜ்  மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.


Leave a Reply