அந்தமான் தொண்டர்களின் அன்பு, அதிகமாக உழைத்திட உந்துசக்தியாக உள்ளது – ஸ்டாலின்

அந்தமானில் உள்ள திமுக நிர்வாகிகள் தன் மீது வைத்திருக்கும் அன்பும், நம்பிக்கையும் பன்மடங்கு அதிகமாக உழைத்திட உந்து சக்தியாக உள்ளது என்று அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கட்சி நிர்வாகிகள் இல்ல திருமணத்திற்காக போர்ட் பிளேயரில் சென்றிருந்தபோது அங்குள்ள திமுகவினர் அளித்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளித்ததாக குறிப்பிட்டுள்ளார். 1,191 கடல் மைல்களுக்கு அப்பாலும் ஒளிரும் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் புகழை கண்டு களிப் பேருவகை கொண்டதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

 

ஊக்கத்துடனும், உத்வேகத்துடனும் செயல்படும் அந்தமான் திமுகவினரின் உழைப்பும், நம்பிக்கையும் தமிழகத்தை காலத்தே மீட்டிடும் வலிமையை பன்மடங்கு பலப்படுத்த உந்துசக்தியாக அமைந்தது என்றால் அது மிகையல்ல என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார்.


Leave a Reply