ஏதோ விரக்தியில் எங்களை விமர்சிக்கிறார்..! பொன்.ராதாகிருஷ்ணன் மீது அமைச்சர் ஜெயகுமார் பாய்ச்சல்!!

தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாகிவிட்டது என பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதற்கு, பதவி கிடைக்காத விரக்தியில் பேசுவதாக அமைச்சர் ஜெயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.

 

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் எஸ்.ஐ.வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் பயங்கரவாதிகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எஸ்.ஐ.வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருந்த பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாகிவிட்டது என தமிழக அரசையும் குறை கூறி இருந்தார்.

 

இதற்கு பதிலடி தரும் வகையில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், பாஜகவில் கட்சியிலும், ஆட்சியிலும் பதவி கிடைக்காத விரக்தியில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுவதாக சாடியுள்ளார்.சட்டம் ஒழுங்கு உள்பட பல்வேறு துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குவதாக மத்திய அரசு விருது வழங்கி பாராட்டியுள்ளது. மத்திய அமைச்சர்கள் பலரும் தமிழக அரசின் நிர்வாகத்தை பாராட்டி வருகின்றனர்.

 

இது போன்ற நிலையில் தவறான கருத்துக்களை பொன்.ராதாகிருஷ்ணன் குறை கூறுவது சரியா? அப்படியென்றால் தவறான கருத்துக்களை கூறி தமிழக அரசை, மத்திய பாஜக அரசு பாராட்டியதையும் பொன் ராதாகிருஷ்ணன் எதிர்க்கிறாரா? என கேள்வி எழுகிறது. இதன் மூலம் அவர் ஏதோ விரக்தியில் பேசுவது போல் தெரிகிறது என அமைச்சர் ஜெயக்குமார் பாய்ச்சல் காட்டியுள்ளார்.


Leave a Reply